Posts

Showing posts from May, 2018

பெண்களுக்காக

: 1. ஐந்து இதழ்கள் உள்ள செம்பருத்தி பூவை அரைத்து நல்லெண்ணையில் காய்ச்சி, வடிகட்டிய பின் தலைக்குத் தேய்த்தால் தலை முடி அடர்த்தியாக வளரும். 2. முடி செழித்து வளர வாரம் ஒருமுறை வெண்ணெய்யை தலைக்குத் தடவி ஒருமணி நேரம் கழித்து கழுவி வந்தால் முடி நன்றாக வளரும். 3. செம்பருத்தம் இலையை அரைத்து தலையில் தடவி அரைமணி நேரம் ஊறிய பின் தலையை சீயக்காய் அல்லது ஷாம்பூ போட்டு அலசவும். கூந்தல் அடர்த்தியாக வளரும். 4. கறிவேப்பிலை, சின்ன வெங்காயம்-4, இரண்டையும் நன்றாக அரைத்து அத்துடன் தயிர் சேர்த்து தலைக்கு தேய்த்து முழுகினால் கூந்தல் நல்ல கருமையான நிறத்துடன் வளரும். 5. கடுக்காய், செம்பருத்தம் பூ, நெல்லிக்காய் ஆகியவைகளை சம அளவு எடுத்து தேங்காய் எண்ணெயில் காச்சி கூந்தலில் தடவினால் முடி நன்றாக வளரும். 6. வெந்தயத்தை ஊறவைத்து நன்கு அரைத்து தலையில் பேக் போல போட்டு ஊறிய பிறகு தலைக்கு குளித்தால் தலை முடி செழித்து வளரும். 7. ஒரு லிட்டர் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் நெல்லிக்காய் பொடி, தான்றிக்காய் பொடி, மருதாணி பொடி, கறிவேப்பிலை பொடி, கரிசலாங்கண்ணி பொடி, வெட்டிவேர், ரோஜா இதழ்கள், சந்தன பொடி ஆகியவ...

தண்ணீர் வைத்தியம்

... குளிக்க... குடிக்க.. ‘தாகம்’னு அடிக்கடி ஃப்ரிஜ் தண்ணியை எடுத்து குடிக்கப் போறாங்க. அது, உடம்பு சூட்டை கிளப்பி விடுமே தவிர, தாகத்தைத் தீர்க்காது. அதை விட நன்னாரி வேர் ஊறப்போட்ட தண்ணியை குடிக்கச் சொல்லுங்க. உடம்பு உஷ்ணம், தாகம் சட்டுனு தணியும். மலையாளத்துக்காரங்க எல்லாம் சீரகம் ஊற வச்ச தண்ணியைத்தான் குடிப்பாங்க. கோடைக் காலத்துக்கு உடம்பை குளுமை பண்ற அருமையான தண்ணி அது. அதுல துளசியையும் சேர்த்து போடலாம். எதுவானாலும் ஒவ்வொரு நாளும் புதுத் தண்ணியைத் தயார் பண்ணணுங்க. வெயில் நேரத்துல குழந்தைகள் மட்டுமில்லாம பெரியவங்களுக்குக்கூட அக்கி, அம்மை மாதிரியான நோய்கள் வரலாம். அதைத் தடுக்க, ஒரு வாளி நிறைய தண்ணியில நிறைய வேப்பிலையை போட்டு வெயில்ல வச்சுடுங்க. தண்ணி சூடானதும் வேப்பிலையை எடுத்துப் போட்டுட்டு குளிங்க. கிருமிகள்கிட்டேயிருந்து உடம்பை காக்கிற அருமையான கிருமிநாசினி தண்ணி இது! பெண்கள்னா உடம்புல மஞ்சளும் ஆண்கள்னா கொஞ்சம்போல சந்தனமும் பூசி, நல்லா தேய்ச்சி இந்த தண்ணியில குளிச்சா, அதோட பலனே தனி! ஒரு பக்கெட் தண்ணிக்கு அரை மூடி எலுமிச்சம்பழம் பிழிஞ்சு குளிச்சா, வியர்வை நாற்றம் நீங்கி இன்னும்...

கைகண்ட மருத்துவம்

கைகண்டஅனுபவமருத்துவம்! கீழ்கண்ட மருத்துவக் குறிப்புகள் எல்லாம் மலைவாழ்மக்கள் பயன்படுத்தும் மருத்துவக் குறிப்புகள்.கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காதது.அனைவருக்கும் பயன்படவேண்டி தேடிப்பிடித்து பகிர்கிறேன்.பாதுகாப்பாக இதனை எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.உங்களுக்கும்/நண்பர்களுக்கும் பயன்படும்.- கைகண்ட [அனுபவ] மருத்துவம் !! நாடோடி மக்களின் பழக்கவழக்கங்களை நன்கு அறிந்து, அதன் பயனாகப் பல மூலிகைகளின் சிறப்பை உணர்ந்து, சித்த வைத்தியத்திலும் தேர்ந்தவர் பிலோஇருதயநாத். அவரின் கைகண்ட அனுபவம் மருத்துவம் இவை." சில எளிய மருத்துவம்: !!! வயிற்றுவலிக்கு: முருங்கைக் கீரையை ஒரு கைப்பிடி எடுத்துச் சுத்தமான தண்ணீரில் கழுவி, உரலில் போட்டு நன்றாக இடித்துச் சாறு பிழிந்துகொண்டு, காலை, பகல், மாலையில் கொஞ்சம் சர்க்கரையுடன் அதைக் கலந்து உணவுக்குமுன் 1/4 ஆழாக்குச் சாப்பிட்டு வந்தால் வயிற்றுவலி குணமாகும். இடுப்பில் வரும் வண்ணார் புண்: இது சாதாரணமாய் எங்கே வாழ்ந்தாலும் சரி, சிலருக்கு உண்டாகும். இந்தப் புண் இருப்பவர்கள் இடுப்பைச் சுத்தமாகக் கழுவிக்கொண்ட பின், வாழைப் பழத்தோலின் உள் பக்கத்தைப் புண்ணின்மே...

செரிமானக்குறையிட்டால் வரும் நோய்கள்

செரிமானக் கோளாறுகள் பற்றி பேசும் முன் செரிமானம் பற்றி அறிந்து கொள்வது அவசியமாகிறது. உடலின் முக்கிய உறுப்புக்களில் ஒன்றான வயிற்றில் தான் உணவு தங்கி செரிமானம் நடக்கிறது. செரிமானத்தினால் தான் உடல் சக்தி பெறுகிறது. வயிறு உணவை சேமிக்கும் இடம் மட்டுமல்லாமல் உணவு ஊடுருவிச் செல்லத்தக்க வகையில் உருவாக்கும் சுரப்பிகள் சுரக்கும் இடமாகவும் இருக்கிறது. வயிற்றின் உட்புறம் மெல்லிய ஜவ்வுப்படலம் மூடியிருக்கும். அதில் ஹைட்ரோ குளோரிக் அமிலம் மற்றும் பல நொதிகளும் சுரக்கின்றன. ரெனின், பெப்சின் என்னும் இரு சுரப்புகள் உணவை சிறுசிறு துகள்களாக ஆக்க உதவிகின்றன. குடல் சுவரில் வில்லாக்கள் எனும் நுண்ணிய அமைப்புகள் நீண்ட வடிவில் உணவை உறிஞ்சத்தக்கவகையில் உள்ளன. பைல் சுரப்பு, கணைய சுரப்பு, குடல் சுரப்பு மற்றும் பேக்டிரியா எனப்படும் நுண்ணுயிர்கள் உணவை இன்னும் சிறு துகள்களாக்கி வில்லா உறிஞ்சத்தக்க வகையில் உருவாக்குகின்றன. குடலில் வேறு வேறு பகுதிகளில் வேறு வேறு பொருட்கள் செரிக்கப்பட்டு உறிஞ்சப்படுகின்றன. கடைசியாக பெருங்குடலில் தண்ணீர் உறிஞ்சப்பட்ட பின்பு மீதியிருக்கும் கழிவு மலக்குடல் வழியே வெளியே போகின்றது. ...

பல நோய்களுக்கான ஒரு மருந்து!!!

தேவையான பொருட்கள் ********** *  வெந்தயம்.    -  250gm *  ஓமம்               -  100gm *  கருஞ்சீரகம்  -  50gm செய்முறை: ****** 1.மேலே உள்ள 3 பொருட்களையும்  சுத்தம் செய்து அதை தனியாக கருகாமல் வறுத்து,  தூள் செய்து ஒன்றாக கலந்து ஒரு கண்ணாடி குடுவையில் வைத்துக்கொள்ள வேண்டும். 2.இக் கலவையை ஒரு ஸ்பூன் அளவு   இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் உட்கொள்ள வேண்டும். 3.இதை சாப்பிட்ட பின்பு எந்த உணவும் சாப்பிடக் கூடாது. 4.தினசரி இந்த கலவையை சாப்பிடுவதால் நம் உடலில் தேங்கி இருக்கும் அனைத்து நச்சு கழிவுகளும்  மலம், சிறுநீர் மற்றும் வியர்வை மூலம் வெளியேற்றப்படுகிறது. பயன்கள் ***** 1. தேவையான கொழும்பு எரிக்கப்பட்டு தேவையற்ற கொழுப்பு  நீக்கப்படுகிறது. 2. இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு சீரான இரத்த ஓட்டத்தை  ஏற்படுத்துகிறது. 3. இரத்த குழாய்களில் உள்ள அடைப்புகள் நீக்கப்படுகிறது. 4. இருதயம் சீராக       இயங்குகிறது. 5. சருமத்தில் உள்ள சுருக...

உடல்பருமனைக் குறைக்க

உடல்பருமனைக் குறைக்க ஆயுர்வேத மருத்துவத்தில் நிறைய வழிகள் உள்ளன. அவை என்னவென்று பார்ப்போம்.. எலுமிச்சையும் தேனும் ஒரு கப் சுத்தமான நீரை எடுத்துச் சூடுபடுத்திக்கொள்ளவும். மிதமாகச் சூடானதும் அதனுடன் எலுமிச்சைச் சாறு மற்றும் இரண்டு டேபிள்ஸ்பூன் தேன் சேர்த்துக் குடிக்க வேண்டும். இதை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது நல்லது. சுமார் இரண்டு மாதங்கள் இதைத் தொடர்ந்து செய்துவர நல்ல பலன் தெரியும். இதில் ஒரு டேபிள்ஸ்பூன் கருமிளகு சேர்த்தும் குடிக்கலாம். திரிபலா பொடி ஒரு கப் நீரை எடுத்து, அதில் ஒரு டேபிள்ஸ்பூன் திரிபலா பொடியை சேர்த்துக்கொள்ளவும்ம். இரவு முழுக்க இதை அப்படியே வைத்திருந்து, மறுநாள் காலை அது அளவில் பாதியாக ஆகும்வரை அடுப்பில் வைத்து கொதிக்க வைக்கவும். பின்னர் அதை வடிகட்டி, மிதமான சூட்டில் எடுத்துக்கொண்டு இரண்டு டேபிள்ஸ்பூன் தேன் சேர்த்துக் குடித்து வந்தாலும் எடை குறையும். சுரைக்காய் ஜூஸ் சுரைக்காயை தோல் மற்றும் நடுப்பகுதியை நீக்கிவிட்டு, மிக்ஸியில் அரைத்துச் சாறாக்கிக் கொள்ளவேண்டும். துளசி இலை மற்றும் புதினா இலையை அரைத்து சுரைக்காய் சாற்றுடன் கலந்து தினமும் குடிக்க...

எடையைக் குறைக்க

இதை ஒவ்வொரு நாளும் குடித்து வந்ததால் ஒரே மாதத்தில் 10 கிலோ வெயிட் குறைக்கலாம் இது எந்த மாயமோ மந்திரமோ கிடையாது. உண்மையிலேயே நம்முடைய வீட்டு கிச்சனில் இருக்கும் சில இயற்கையான மருந்துப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்த நீர் உடலில் தேங்கியுள்ள தேவையில்லாத கொழுப்புகளை மிக எளிமையாகக் கரைத்துவிடுகிறது. அப்படிப்பட்ட இந்த இயற்கை பானத்தை தினமும் காலையில் குடித்து வந்தால், எந்த அதிகப்படியான டயட்டும் இல்லாமல் ஒரே மாதத்தில் 10 கிலோ வரையிலும் எடையைக் குறைக்க முடியும். தேவையான பொருட்கள் சீரகப்பொடி – 1 ஸ்பூன் பட்டைத்தூள் – கால் ஸ்பூன் இஞ்சி பவுடர் – அரை ஸ்பூன் எலுமிச்சை தோல் – 2 துண்டு தேன் – சுவைக்கேற்ப செய்முறை அரை லிட்டர் அளவுக்கு தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து அடுப்பை அணைத்துவிடுங்கள். நல்ல கொதிநிலையில் உள்ள தண்ணீரில் சீரகப்பொடி, இஞ்சிப்பொடி, பட்டைத்தூள்,எலுமிச்சை தோல் ஆகியவற்றைப் போட்டு ஊறவிடுங்கள். அந்தப் பொருட்களின் சாறு முழுவதும் தண்ணீரில் இறங்கிய பின்பு, வடிகட்டி, சற்று ஆறியவுடன் சுவைக்கேற்ப தேன் சேர்த்து கலந்து குடிக்கலாம். இந்த பானத்தை காலையில் எழுந்ததும் வெறும் வயிற...

மூட்டுவலி நீங்க..

மூட்டுவலி நீங்க.. வீட்டு வைத்தியம் .... பல்வேறு காரணங்களால் மூட்டுவலி ஏற்பட்டு துன்பப்படும் சகோதர,சகோதரிகளுக்கு வீட்டில் உள்ள பொருளை கொண்டு எளிதில் நிவாரணம் பெற இரண்டு முறைகளை இங்கே கூறுவோம். அவரவர் வாய்ப்பு,வசதிக்கு ஏற்ப பயன்படுத்தி நலம்பெறுக.. கஸ்த்தூரி மஞ்சள்      சாம்பிராணி      கடுகு   இம்மூன்றையும் சம எடையில் எடுத்துக்கொண்டு தனித்தனியே உடைத்து, இடி,த்து,மிக்சியில் ,அல்லது உரலில்இட்டு நன்கு   பவுடர் ஆக்கி பின்பு அனைத்தையும் ஒன்றாக கலந்து ஒரு டப்பாவில் வைத்துக்கொண்டு           தேவையான நேரத்தில் மிதமான சுடுநீரில் தேவைக்கேற்ப   அந்த   பொடியை போட்டு கலக்கி அந்த கலவையை பாதிப்புள்ள வலி உள்ள இடத்தில் பற்றிட வலி நீங்கும் .        அல்லது  நாட்டு மருந்நு கடையில் கிடைக்கும் காசுகட்டி,   வசம்பு இவைஇரண்டையும் சம எடை வாங்கிவந்து தனித்தனியே உடைத்து பொடித்து, பவுடராக்கி பின்பு ஒன்றாக கலந்து டப்பாவில் வைத்துக்கொண்டு த...

தன்னம்பிக்கையை அதிகரிக்க !!!

1. எப்போதும் பின் வரிசையில் ஒளியாதீர்கள். முன் வரிசைக்கு வாருங்கள். 2. யாரைச் சந்தித்தாலும், தைரியமாக அவர்கள் கண்களைப் பார்த்துப் பேசுங்கள்.... அவர் எப்பேர்ப்பட்ட பிரபலமாக இருந்தாலும், தலை கவிழ்ந்து தரையில் விரலால் கோலம் போடுவதெல்லாம் வேண்டாம். 3. நீங்கள் நடக்கிற வேகத்தை அதிகப்படுத்துங்கள். நடையில் தெரியும் அந்த சுறுசுறுப்பு, உற்சாகம் உங்கள் செயல் வேகத்தையும் தானாக அதிகரிக்கும். 4. எந்த கூட்டத்திலும் அடுத்தவர்கள் பேசட்டும் என்று காத்திருக்காதீர்கள். அங்கே கேட்கிற முதல் குரல் உங்களுடையதாகட்டும். 5. எந்நேரமும் உதடுகளில் ஒரு புன்னகையை வைத்திருங்கள். அது தருகிற தன்னம்பிக்கை வேறு எங்கேயும் கிடைக்காது. 1. எப்போதும் பின் வரிசையில் ஒளியாதீர்கள். முன் வரிசைக்கு வாருங்கள். 2. யாரைச் சந்தித்தாலும், தைரியமாக அவர்கள் கண்களைப் பார்த்துப் பேசுங்கள்.... அவர் எப்பேர்ப்பட்ட பிரபலமாக இருந்தாலும், தலை கவிழ்ந்து தரையில் விரலால் கோலம் போடுவதெல்லாம் வேண்டாம். 3. நீங்கள் நடக்கிற வேகத்தை அதிகப்படுத்துங்கள். நடையில் தெரியும் அந்த சுறுசுறுப்பு, உற்சாகம் உங்கள் செயல் வேகத்தையும் தானாக அ...

எளிய இயற்கை மருத்துவம் :-

1. மணத்தக்காளிக் கீரையை பருப்புடன் சேர்த்து தினமும் சாப்பிட்டு வந்தால் ஆசனக்கடுப்பு, மூல நோய் குணமாகும். 2. கறிவேப்பிலை, இஞ்சி, சீரகம் மூன்றையும் சிறிதளவு எடுத்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்துக் குடித்தால் அஜீரணம் சரியாகிவிடும். 3. முள்ளங்கி கீரையில் வைட்டமின் சத்து உள்ளது. இக்கீரை தொற்று நோய்களை விரட்டி அடிக்கும். 4. உடல் எடை குறைந்தவர்கள் வாழைப்பழம் தினமும் இரவில் உண்டு வந்தால் எடை கூடும். 5. தினசரி ஒரு வெங்காயத்தை பச்சையாக உண்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும். இருமல், சளி நீங்கும். 6. சுண்டைக்காயில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. இந்தக்காய் ஆஸ்துமா, ஜீரம் முதலியவற்றை நீக்கும். 7. கர்ப்பிணிப் பெண்கள் தினமும் ஒரு முறை கேழ்வரகில் செய்த உணவுப்பொருளை சாப்பிட வேண்டும். இதில் இரும்புச்சத்து, கால்சியம் உள்ளது. 8. வேப்பம்பூவை ரசம் வைத்துச் சாப்பிட்டால் உடம்பில் உள்ள கிருமிகள் அழியும். பித்தம் குறையும். 9. தினமும் முருங்கைக் கீரையைச் சாப்பிட்டால் நீரழிவு நோய் கட்டுப்படும். கண் பார்வை தெளிவு பெறும். 10. அதிக இருமல் ஏற்படும் போது ஒரு ஸ்பூன் தேன்...

தொட்டாற்சுருங்கி.

 தெய்வீக மூலிகை ‘நமஸ்காரி' என்று அழைக்கப்படும் இந்த மூலிகை காந்த சக்தி உடையது. வன்னிமரம் போல் தெய்வ சக்தி உடைய மூலிகை என்பதால் துளசி போல வீட்டில் வைக்கலாம். நாளும் தொட வாய்ப்பாகும்.            மாத விலக்காகும் பெண்கள் இச்செடியின் அருகில் செல்லக் கூடாது.                          தெய்வீக மூலிகையான இதனை தொடுகின்ற போது அதனுடைய சக்தி மனிதனுள் மின்சாரம் போல் பாயும். 48 நாள் தவறாது தொட்டு வந்தால் உள வாற்றல் பெருகி மனோசக்தி அதிகமாகி சொன்னது பலிக்கும். நினைத்தது நடக்கும். இதன் இலையைக் களிமண்ணுடன் அரைத்து பற்றிட வாத வீக்கும் கரையும். கீழ்வாதம் கரையும். இதன் வேரையும் இலையையும் சம அளவில் எடுத்து உலர்த்தி துணியில் சலித்து வைக்கவும், இந்த சூரணம் 10-15 கிராம் பசும்பாலில் குடிக்க சிறு நீர் பற்றிய நோய்கள், மூலச்சூடு, ஆசனக்கடுப்பு தீரும். 10 முதல் 20 நாட்களுக்கு தொடர்ந்து சாப்பிட உடலில் கிளர்ச்சி பெருகும். சிறுநீர் கல் கரையும் தொ...

கருமையைப் போக்கும் வழிகள்

பெரும்பாலான பெண்கள் சந்திக்கும் ஓர் பிரச்சனை தான் வாயைச் சுற்றி அசிங்கமாக கருமையான படலம் இருப்பது. இந்த ஒரு விஷயத்தால் பல பெண்கள் தங்கள் தோற்றத்தில் தன்னம்பிக்கை இழந்து காணப்படுகிறார்கள். இப்படி ஒருவருக்கு வாயைச் சுற்றி கருமையான படலம் ஏற்படுவதற்கு ஹைப்பர்-பிக்மென்டேஷன், ஹார்மோன்கள், வேக்சிங், ஷேவிங் போன்றவை காரணங்களாக இருக்கலாம். வாயைச் சுற்றி கருமையான படலம் இருந்தால், அது சிரிக்கும் போது மோசமான தோற்றத்தைக் கொடுக்கும். அதிலும் சிவப்பு நிற லிப்ஸ்டிக் போட்டால், அது இன்னும் மோசமாக இருக்கும். சில சமயங்களில் வாயைச் சுற்றி ஏற்படும் வறட்சியும் கருமையான படலத்தை உருவாக்கலாம். அதோடு உடல் பருமன், குறிப்பிட்ட மருந்துகள் மற்றும் புற்றுநோய் போன்றவையும் வாயைச் சுற்றி கருமையான படலத்தை உண்டாக்கலாம். எனவே ஒருவருக்கு வாயைச் சுற்றி ஏற்படும் கருமையான படலத்திற்கான உண்மையான காரணம் தெரிந்து கொள்ள வேண்டுமானால், மருத்துவரிடம் சென்று கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். வாயைச் சுற்றி இருக்கும் கருமையை ஒருசில இயற்கை வழிகளின் மூலமும் சரிசெய்யலாம். இக்கட்டுரையில் வாயைச் சுற்றி அசிங்கமாக இருக்கும் கருமையைப் போக்க...

சர்க்கரை நோய்க்கு

தேவையான பொருட்கள் : ஆவாரம் பூ - 200 கிராம் சுக்கு - 2 துண்டு ஏலக்காய் - 3 உலர்ந்த வல்லாரை இலை - 200 கிராம் சோம்பு - 2 டீஸ்பூன் செய்முறை: மேற்க்கண்ட அனைத்துப் பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்து ஒன்றிரண்டாகப் பொடித்து வைத்துக்கொள்ளவும். தேவையானபோது அதில் கையளவு எடுத்து அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி கால் லிட்டராக ஆகும்வரை சுண்டக் காய்ச்சவும். அதை வடிகட்டி தேவையான அளவு பனை வெல்லம் அல்லது பனங்கற்கண்டு சேர்த்துக் குடிக்கலாம். மருத்துவப்பயன்: சர்க்கரை நோய்க்கு கைகண்ட மருந்து சிறுநீர்க் கோளாறுகளை நிவர்த்தி செய்யும் இதய நோய் வாய்ப்புண் சரும நோய்களைப் போக்கும் ஆற்றல்கொண்டது. உஷ்ணத்தைக் குறைத்து உடலைக் குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளும்.

வெப்பத்திலிருந்து பாதுகாக்கும் வழி முறை

இந்த கோடைகாலத்தில் உறிஞ்சும் வெப்பத்திலிருந்து உங்களை பாதுகாக்க ஒரு   வழி முறை .   வீட்டை விட்டு வெளியே செல்லும் முன்   ஒரு சிறிய பஞ்சினை வலது காதுள் மூடுமாறு வைத்துக்கொள்ள வேண்டும் .   ஒரு சில நிமிடங்களில் , இடது மூக்கு நாசித்துவாரம் திறந்து சிறப்பாக செயல்பட ஆரம்பித்து விடும் .   அது சந்திரநாடி என்பதால் , அது உள்ளே இருந்து குளிர்ச்சியாக இருக்கும் . உஷ்ணம் , உயர் BP,   stroke , ஒற்றை தலைவலி மற்றும் வெப்பத்தால் ஏற்படும் மற்ற பிரச்சனைகள் ஆகியவற்றிலிருந்து நீங்கள் காப்பாற்றப்படுவீர்கள் . இதனை உடனே பகிர்ந்து கொள்ளுங்கள்

Short cut keys

எளிய வைத்தியம்1

1) பேரிச்சம் பழத்தை தேனில் ஊற வைத்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்கும் . 2) கடுகை ஊற வைத்து அரைத்து தினமும் கை ம ுட்டியில் தடவி 5 நிமிடம் ஊற வைத்து பின் கழுவி வர கை முட்டியின் கருப்பு குறையும் 3) எலுமிச்சை சாறு , தேன் , பால் , மூன்றையும் கலந்து தினமும் முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து கழுவினால் முகம் பொலிவு பெறும் . 4) பேரிச்சம் பழத்தை பால் போட்டு காய்ச்சி தினமும் இரவு தூங்கும் முன் குடிக்க உடல் எடை அதிகரிக்கும் . 5) வெந்தையம் , வேப்பிலை , பயத்த மாவு மூன்றையும் சேர்த்து அரைத்து தலையில் தேய்த்து 20 நிமிடம் கழித்து குளித்தால் பொடுகு நீங்கும் . 6) சந்தனம் , பன்னீருடன் கலந்து தினமும் முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின் முகம் கழுவினால் முகப்பரு நீங்கும் . 7) வில்வ இலையை பொடி செய்து காலை வெறும் வயிற்றில் வாயில் போட்டு தண்ணீர் குடிக்க சர்க்கரை நோய் குறையும் . 8) கீழாநெல்லி , வல்லாரை இந்த இரண்டையும் சம அளவு அரைத்து தயிர் சேர்த்து 1 தேக்கரண்டி காலை , மா...

எளிய வைத்தியம்

  வெந்தயத்தை தேங்காய்ப்பாலில் ஊறவைத்து அரைத்து தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால் தலைமுடி உதிர்தல் குறையும் . முருங்கைப் பூவை பரு ப்புடன் சமைத்து உண்டால் கண் எரிச்சல் , வாய் நீர் ஊறல் , வாய்க் கசப்பு நீங்கும் .   சிறிதளவு துளசி இலையை எடுத்து அதை இடித்து சாறு எடுத்து தினமும் 3 வேளை குடித்து வந்தால் இருமல் குணமாகும் .   சிறிது பெருங்காயத்தை எடுத்து வெந்நீரில் கரைத்து அந்த தண்ணீரை குடித்து வர இருமல் நிற்கும் .   தென்னைமரக் குருத்தோலையை நெருப்பில் விட்டு தூள் செய்து பின்பு தேங்காய் எண்ணையில் குழப்பி செருப்பு கடிபட்ட இடத்தில் தடவி வர காயம் குணமாகும் .   காய்ந்த திராட்சை பழத்தை பசும்பாலில் ஊற வைத்து பிழிந்து அந்த சாறை வாடிகட்டி குழந்தைகளுக்கு கொடுத்து வர மலச்சிக்கல் தீரும் .   ஆடாதொடா இலை , துளசி , வெற்றிலை , தூதுவளை , அரைத்து பின் வேகவைத்து தேன் கலந்து சாப்பிட்டு வர சளித்தொல்லை குணமாகும் .   திப்பிலி , கடுகு , சீரகம் , சுக்கு , மிளகு , வேப்பங்கொழுந்து , சேர்த்து...