செரிமானக்குறையிட்டால் வரும் நோய்கள்
செரிமானக் கோளாறுகள் பற்றி பேசும் முன் செரிமானம் பற்றி அறிந்து கொள்வது அவசியமாகிறது. உடலின் முக்கிய உறுப்புக்களில் ஒன்றான வயிற்றில் தான் உணவு தங்கி செரிமானம் நடக்கிறது. செரிமானத்தினால் தான் உடல் சக்தி பெறுகிறது. வயிறு உணவை சேமிக்கும் இடம் மட்டுமல்லாமல் உணவு ஊடுருவிச் செல்லத்தக்க வகையில் உருவாக்கும் சுரப்பிகள் சுரக்கும் இடமாகவும் இருக்கிறது. வயிற்றின் உட்புறம் மெல்லிய ஜவ்வுப்படலம் மூடியிருக்கும். அதில் ஹைட்ரோ குளோரிக் அமிலம் மற்றும் பல நொதிகளும் சுரக்கின்றன. ரெனின், பெப்சின் என்னும் இரு சுரப்புகள் உணவை சிறுசிறு துகள்களாக ஆக்க உதவிகின்றன. குடல் சுவரில் வில்லாக்கள் எனும் நுண்ணிய அமைப்புகள் நீண்ட வடிவில் உணவை உறிஞ்சத்தக்கவகையில் உள்ளன. பைல் சுரப்பு, கணைய சுரப்பு, குடல் சுரப்பு மற்றும் பேக்டிரியா எனப்படும் நுண்ணுயிர்கள் உணவை இன்னும் சிறு துகள்களாக்கி வில்லா உறிஞ்சத்தக்க வகையில் உருவாக்குகின்றன. குடலில் வேறு வேறு பகுதிகளில் வேறு வேறு பொருட்கள் செரிக்கப்பட்டு உறிஞ்சப்படுகின்றன. கடைசியாக பெருங்குடலில் தண்ணீர் உறிஞ்சப்பட்ட பின்பு மீதியிருக்கும் கழிவு மலக்குடல் வழியே வெளியே போகின்றது. ...
Comments
Post a Comment