Posts

ஆரோக்கியமான_வாழ்க்கை...

வீட்டில் இருக்கும் ஏழ்மை விலக கெட்ட சக்திகள் நீங்க... தங்களை சுற்றியும் அல்லது தாம் வசிக்கும் இடத்திலும் கெட்ட சக்திகளோ அல்லது எதிர்மறை சக்திகளை இருக்க விரும்ப மாட்டார்கள். இது தேவையில்லாத மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை அதிகரிக்க செய்யும். மேலும் இதனால் வீட்டில் ஏழ்மை அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. இதை போக்க உப்பைப் பயன்படுத்தி இந்த நிலையை மாற்ற சில வழிகள் இருக்கின்றன. இதனால் வீட்டில் இருக்கும் ஏழ்மை விலக கெட்ட சக்திகள் நீங்க முடியும் என் ற ஒரு நம்பிக்கை இருக்கிறது. அந்த வழிகள் என்னவென்று இப்பொழுது பார்ப்போம் இதை  ஞாயிறு  கிழமைகளில் மட்டும் முயற்சி செய்யக் கூடாது, கடல் உப்பை நீருடன் கலந்து வீடு முழுக்க கழுவ வேண்டும் இது வீட்டில் இருக்கும் எதிர்மறை எண்ணங்கள் அனைத்தையும் நீக்கி விடும். அடுத்ததாக ஒரு டம்ளர் நீரில் ஒரு சிட்டிகை அளவு உப்பு சேர்த்து அதை வீட்டின் தென்மேற்கு மூலையில் வைத்து விடுங்கள் இது வீட்டில் இருந்து கெட்ட சக்திகளை விலகச் செய்யும். இந்த டிப்ஸை செய்யும்போது எப்போதெல்லாம் நீரின் வண்ணம் மாறுகிறதோ அப்போதெல்லாம் நீங்கள் நீரை மாற்றி உப்பு சேர்த்து வை...

காயங்கள்,புண்கள்(INJURiES)

1. 5கிராம் திரிபலாசூரணத்தை 200மிலி நீரிலிட்டுக் காய்ச்சி, காயங்களை கழுவி, மத்தன் தைலம் பூசிவர காயங்கள், புண்கள் குணமாகும் 2. பறங்கிப்பட்டை சூரணமாத்திரை2,தினம்3வேளை கொண்டு, குங்கிலிய வெண்ணை அல்லது அருகன்தைலம் பூச தீப்பட்ட காயங்கள் குணமாகும் 3. தவசுமுருங்கை இலைகளை இடித்து,வதக்கிக்கட்ட,அடிபட்ட காயம்,வீக்கம் குணமாகும் 4. மஞ்சளை அரைத்துப் பூச சிரங்குகள்,அடிபட்ட புண்கள்,கட்டிகள் குணமாகும் 5. அரத்தையை வெந்நீரிலரைத்துப் பூச அடிபட்ட வீக்கம்,வலி குணமாகும் 6. முட்சங்கன் வேர்பட்டையை யரைத்துப் பூச அடிபட்ட வீக்கம் கரையும் 7. ஊமத்தைசாறு,தே.எண்ணை சமன் கலந்து,காய்ச்சி,வடித்துப் பூச புண்கள், அழுகிய புண்கள் குணமாகும் 8. கோவை இலையை கசக்கிக் கட்ட ஆறாத புண்கள் ஆறும். 9. சிற்றாமுட்டி இலைகளையரைத்துப் பூச ஆறாத புண்கள் ஆறும் 10. அதிமதுரதூளை,நெய்விட்டுப் பிசைந்து பூச காயங்கள்,வெட்டுக்காயங்கள் குணமாகும் 11. அரிவாள்மனைபூண்டு இலைகளையரைத்துப் பூச.சாற்றினை விட்டுக்கட்ட, வெட்டுக் காயத்தினாலேற்பட்ட இரத்தப்போக்கு,காயம் குணமாகும் 12. அரிவாள்மனைபூண்டு இலைதூள்,சமன் தேன்மெழுகு,சிறிது தே.எண்ணை கலந்து...

பெண்களுக்காக

: 1. ஐந்து இதழ்கள் உள்ள செம்பருத்தி பூவை அரைத்து நல்லெண்ணையில் காய்ச்சி, வடிகட்டிய பின் தலைக்குத் தேய்த்தால் தலை முடி அடர்த்தியாக வளரும். 2. முடி செழித்து வளர வாரம் ஒருமுறை வெண்ணெய்யை தலைக்குத் தடவி ஒருமணி நேரம் கழித்து கழுவி வந்தால் முடி நன்றாக வளரும். 3. செம்பருத்தம் இலையை அரைத்து தலையில் தடவி அரைமணி நேரம் ஊறிய பின் தலையை சீயக்காய் அல்லது ஷாம்பூ போட்டு அலசவும். கூந்தல் அடர்த்தியாக வளரும். 4. கறிவேப்பிலை, சின்ன வெங்காயம்-4, இரண்டையும் நன்றாக அரைத்து அத்துடன் தயிர் சேர்த்து தலைக்கு தேய்த்து முழுகினால் கூந்தல் நல்ல கருமையான நிறத்துடன் வளரும். 5. கடுக்காய், செம்பருத்தம் பூ, நெல்லிக்காய் ஆகியவைகளை சம அளவு எடுத்து தேங்காய் எண்ணெயில் காச்சி கூந்தலில் தடவினால் முடி நன்றாக வளரும். 6. வெந்தயத்தை ஊறவைத்து நன்கு அரைத்து தலையில் பேக் போல போட்டு ஊறிய பிறகு தலைக்கு குளித்தால் தலை முடி செழித்து வளரும். 7. ஒரு லிட்டர் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் நெல்லிக்காய் பொடி, தான்றிக்காய் பொடி, மருதாணி பொடி, கறிவேப்பிலை பொடி, கரிசலாங்கண்ணி பொடி, வெட்டிவேர், ரோஜா இதழ்கள், சந்தன பொடி ஆகியவ...

தண்ணீர் வைத்தியம்

... குளிக்க... குடிக்க.. ‘தாகம்’னு அடிக்கடி ஃப்ரிஜ் தண்ணியை எடுத்து குடிக்கப் போறாங்க. அது, உடம்பு சூட்டை கிளப்பி விடுமே தவிர, தாகத்தைத் தீர்க்காது. அதை விட நன்னாரி வேர் ஊறப்போட்ட தண்ணியை குடிக்கச் சொல்லுங்க. உடம்பு உஷ்ணம், தாகம் சட்டுனு தணியும். மலையாளத்துக்காரங்க எல்லாம் சீரகம் ஊற வச்ச தண்ணியைத்தான் குடிப்பாங்க. கோடைக் காலத்துக்கு உடம்பை குளுமை பண்ற அருமையான தண்ணி அது. அதுல துளசியையும் சேர்த்து போடலாம். எதுவானாலும் ஒவ்வொரு நாளும் புதுத் தண்ணியைத் தயார் பண்ணணுங்க. வெயில் நேரத்துல குழந்தைகள் மட்டுமில்லாம பெரியவங்களுக்குக்கூட அக்கி, அம்மை மாதிரியான நோய்கள் வரலாம். அதைத் தடுக்க, ஒரு வாளி நிறைய தண்ணியில நிறைய வேப்பிலையை போட்டு வெயில்ல வச்சுடுங்க. தண்ணி சூடானதும் வேப்பிலையை எடுத்துப் போட்டுட்டு குளிங்க. கிருமிகள்கிட்டேயிருந்து உடம்பை காக்கிற அருமையான கிருமிநாசினி தண்ணி இது! பெண்கள்னா உடம்புல மஞ்சளும் ஆண்கள்னா கொஞ்சம்போல சந்தனமும் பூசி, நல்லா தேய்ச்சி இந்த தண்ணியில குளிச்சா, அதோட பலனே தனி! ஒரு பக்கெட் தண்ணிக்கு அரை மூடி எலுமிச்சம்பழம் பிழிஞ்சு குளிச்சா, வியர்வை நாற்றம் நீங்கி இன்னும்...

கைகண்ட மருத்துவம்

கைகண்டஅனுபவமருத்துவம்! கீழ்கண்ட மருத்துவக் குறிப்புகள் எல்லாம் மலைவாழ்மக்கள் பயன்படுத்தும் மருத்துவக் குறிப்புகள்.கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காதது.அனைவருக்கும் பயன்படவேண்டி தேடிப்பிடித்து பகிர்கிறேன்.பாதுகாப்பாக இதனை எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.உங்களுக்கும்/நண்பர்களுக்கும் பயன்படும்.- கைகண்ட [அனுபவ] மருத்துவம் !! நாடோடி மக்களின் பழக்கவழக்கங்களை நன்கு அறிந்து, அதன் பயனாகப் பல மூலிகைகளின் சிறப்பை உணர்ந்து, சித்த வைத்தியத்திலும் தேர்ந்தவர் பிலோஇருதயநாத். அவரின் கைகண்ட அனுபவம் மருத்துவம் இவை." சில எளிய மருத்துவம்: !!! வயிற்றுவலிக்கு: முருங்கைக் கீரையை ஒரு கைப்பிடி எடுத்துச் சுத்தமான தண்ணீரில் கழுவி, உரலில் போட்டு நன்றாக இடித்துச் சாறு பிழிந்துகொண்டு, காலை, பகல், மாலையில் கொஞ்சம் சர்க்கரையுடன் அதைக் கலந்து உணவுக்குமுன் 1/4 ஆழாக்குச் சாப்பிட்டு வந்தால் வயிற்றுவலி குணமாகும். இடுப்பில் வரும் வண்ணார் புண்: இது சாதாரணமாய் எங்கே வாழ்ந்தாலும் சரி, சிலருக்கு உண்டாகும். இந்தப் புண் இருப்பவர்கள் இடுப்பைச் சுத்தமாகக் கழுவிக்கொண்ட பின், வாழைப் பழத்தோலின் உள் பக்கத்தைப் புண்ணின்மே...

செரிமானக்குறையிட்டால் வரும் நோய்கள்

செரிமானக் கோளாறுகள் பற்றி பேசும் முன் செரிமானம் பற்றி அறிந்து கொள்வது அவசியமாகிறது. உடலின் முக்கிய உறுப்புக்களில் ஒன்றான வயிற்றில் தான் உணவு தங்கி செரிமானம் நடக்கிறது. செரிமானத்தினால் தான் உடல் சக்தி பெறுகிறது. வயிறு உணவை சேமிக்கும் இடம் மட்டுமல்லாமல் உணவு ஊடுருவிச் செல்லத்தக்க வகையில் உருவாக்கும் சுரப்பிகள் சுரக்கும் இடமாகவும் இருக்கிறது. வயிற்றின் உட்புறம் மெல்லிய ஜவ்வுப்படலம் மூடியிருக்கும். அதில் ஹைட்ரோ குளோரிக் அமிலம் மற்றும் பல நொதிகளும் சுரக்கின்றன. ரெனின், பெப்சின் என்னும் இரு சுரப்புகள் உணவை சிறுசிறு துகள்களாக ஆக்க உதவிகின்றன. குடல் சுவரில் வில்லாக்கள் எனும் நுண்ணிய அமைப்புகள் நீண்ட வடிவில் உணவை உறிஞ்சத்தக்கவகையில் உள்ளன. பைல் சுரப்பு, கணைய சுரப்பு, குடல் சுரப்பு மற்றும் பேக்டிரியா எனப்படும் நுண்ணுயிர்கள் உணவை இன்னும் சிறு துகள்களாக்கி வில்லா உறிஞ்சத்தக்க வகையில் உருவாக்குகின்றன. குடலில் வேறு வேறு பகுதிகளில் வேறு வேறு பொருட்கள் செரிக்கப்பட்டு உறிஞ்சப்படுகின்றன. கடைசியாக பெருங்குடலில் தண்ணீர் உறிஞ்சப்பட்ட பின்பு மீதியிருக்கும் கழிவு மலக்குடல் வழியே வெளியே போகின்றது. ...

பல நோய்களுக்கான ஒரு மருந்து!!!

தேவையான பொருட்கள் ********** *  வெந்தயம்.    -  250gm *  ஓமம்               -  100gm *  கருஞ்சீரகம்  -  50gm செய்முறை: ****** 1.மேலே உள்ள 3 பொருட்களையும்  சுத்தம் செய்து அதை தனியாக கருகாமல் வறுத்து,  தூள் செய்து ஒன்றாக கலந்து ஒரு கண்ணாடி குடுவையில் வைத்துக்கொள்ள வேண்டும். 2.இக் கலவையை ஒரு ஸ்பூன் அளவு   இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் உட்கொள்ள வேண்டும். 3.இதை சாப்பிட்ட பின்பு எந்த உணவும் சாப்பிடக் கூடாது. 4.தினசரி இந்த கலவையை சாப்பிடுவதால் நம் உடலில் தேங்கி இருக்கும் அனைத்து நச்சு கழிவுகளும்  மலம், சிறுநீர் மற்றும் வியர்வை மூலம் வெளியேற்றப்படுகிறது. பயன்கள் ***** 1. தேவையான கொழும்பு எரிக்கப்பட்டு தேவையற்ற கொழுப்பு  நீக்கப்படுகிறது. 2. இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு சீரான இரத்த ஓட்டத்தை  ஏற்படுத்துகிறது. 3. இரத்த குழாய்களில் உள்ள அடைப்புகள் நீக்கப்படுகிறது. 4. இருதயம் சீராக       இயங்குகிறது. 5. சருமத்தில் உள்ள சுருக...