ஆரோக்கியமான_வாழ்க்கை...


வீட்டில் இருக்கும் ஏழ்மை விலக கெட்ட சக்திகள் நீங்க...
தங்களை சுற்றியும் அல்லது தாம் வசிக்கும் இடத்திலும் கெட்ட சக்திகளோ அல்லது எதிர்மறை சக்திகளை இருக்க விரும்ப மாட்டார்கள். இது தேவையில்லாத மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை அதிகரிக்க செய்யும். மேலும் இதனால் வீட்டில் ஏழ்மை அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. இதை போக்க உப்பைப் பயன்படுத்தி இந்த நிலையை மாற்ற சில வழிகள் இருக்கின்றன. இதனால் வீட்டில் இருக்கும் ஏழ்மை விலக கெட்ட சக்திகள் நீங்க முடியும் என்ற ஒரு நம்பிக்கை இருக்கிறது. அந்த வழிகள் என்னவென்று இப்பொழுது பார்ப்போம் இதை ஞாயிறு கிழமைகளில் மட்டும் முயற்சி செய்யக் கூடாது, கடல் உப்பை நீருடன் கலந்து வீடு முழுக்க கழுவ வேண்டும் இது வீட்டில் இருக்கும் எதிர்மறை எண்ணங்கள் அனைத்தையும் நீக்கி விடும்.
அடுத்ததாக ஒரு டம்ளர் நீரில் ஒரு சிட்டிகை அளவு உப்பு சேர்த்து அதை வீட்டின் தென்மேற்கு மூலையில் வைத்து விடுங்கள் இது வீட்டில் இருந்து கெட்ட சக்திகளை விலகச் செய்யும். இந்த டிப்ஸை செய்யும்போது எப்போதெல்லாம் நீரின் வண்ணம் மாறுகிறதோ அப்போதெல்லாம் நீங்கள் நீரை மாற்றி உப்பு சேர்த்து வைக்க வேண்டுமாம்.
அடுத்ததாக உப்பு எடுத்து அதை ஒரு பௌலில் போட்டு அதை குளியல் அறையின் ஒரு மூலையில் வைக்க வேண்டும். இந்த உப்பை சீரான இடைவேளையில் நீங்கள் மாற்றுவதற்கு தவறவே கூடாது. இது வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்தி குறைத்து வறுமை நீங்க உதவும்.
அடுத்ததாக சிவப்புத் துணியில் உப்பு சேர்த்து கட்டி வைக்கவும் அதை வீட்டில் நுழைவாயில் பகுதியில் கட்டித் தொங்கவிடவேண்டும். இது மிகவும் நல்ல தீர்வு. செல்வச் செழிப்பு அதிகரிக்க உதவும். இதனால் உங்கள் வீட்டில் இருக்கும் செல்வம் குறையவே குறையாது இறுதியாக நீங்கள் குளிக்கும்போது ஒரு கைப்பிடி அளவு உப்பு சேர்த்து 20 நிமிடங்கள் குளிப்பதால் உங்களிடம் இருக்கும் கெட்ட சக்திகள் நீங்குவதை நீங்களே உணர முடியுமாம்.

Comments