காயங்கள்,புண்கள்(INJURiES)
1. 5கிராம் திரிபலாசூரணத்தை 200மிலி நீரிலிட்டுக் காய்ச்சி, காயங்களை கழுவி, மத்தன் தைலம் பூசிவர காயங்கள், புண்கள் குணமாகும்
2. பறங்கிப்பட்டை சூரணமாத்திரை2,தினம்3வேளை கொண்டு, குங்கிலிய வெண்ணை அல்லது அருகன்தைலம் பூச தீப்பட்ட காயங்கள் குணமாகும்
3. தவசுமுருங்கை இலைகளை இடித்து,வதக்கிக்கட்ட,அடிபட்ட காயம்,வீக்கம் குணமாகும்
4. மஞ்சளை அரைத்துப் பூச சிரங்குகள்,அடிபட்ட புண்கள்,கட்டிகள் குணமாகும்
5. அரத்தையை வெந்நீரிலரைத்துப் பூச அடிபட்ட வீக்கம்,வலி குணமாகும்
6. முட்சங்கன் வேர்பட்டையை யரைத்துப் பூச அடிபட்ட வீக்கம் கரையும்
7. ஊமத்தைசாறு,தே.எண்ணை சமன் கலந்து,காய்ச்சி,வடித்துப் பூச புண்கள், அழுகிய புண்கள் குணமாகும்
8. கோவை இலையை கசக்கிக் கட்ட ஆறாத புண்கள் ஆறும்.
9. சிற்றாமுட்டி இலைகளையரைத்துப் பூச ஆறாத புண்கள் ஆறும்
10. அதிமதுரதூளை,நெய்விட்டுப் பிசைந்து பூச காயங்கள்,வெட்டுக்காயங்கள் குணமாகும்
11. அரிவாள்மனைபூண்டு இலைகளையரைத்துப் பூச.சாற்றினை விட்டுக்கட்ட, வெட்டுக் காயத்தினாலேற்பட்ட இரத்தப்போக்கு,காயம் குணமாகும்
12. அரிவாள்மனைபூண்டு இலைதூள்,சமன் தேன்மெழுகு,சிறிது தே.எண்ணை கலந்து களிம்பு செய்துபூச புண்கள்,காயங்கள் ஆறும்
13. கீழாநெல்லியிலைகளையரைத்துக் கட்ட காயங்கள் குணமாகும்
14. ஓரிதழ்தாமரைசமூலத்துடன்,பச்சைக்கற்பூரம்,கோரோசனை கலந்து, நெய் சேர்த்துப் பூச புண்கள், காயங்கள் குணமாகும்
15. சிவப்புக்குங்கிலியதூள்2கிராம்,200மிலிபாலில் கலந்து தினமும் காலை பருகிவர கட்டிகள் ,காயங்கள் குணமாகும்
Comments
Post a Comment